Last Updated : 18 Jul, 2020 11:27 AM

 

Published : 18 Jul 2020 11:27 AM
Last Updated : 18 Jul 2020 11:27 AM

எனக்கு யார் கருணையும் தேவையில்லை; சிறந்த வீரரை முன்னால் நிறுத்துங்கள்; ஒரு கை பார்க்கிறேன்: ஹர்பஜன் சிங் சவால்

ஹர்பஜன் சிங்குக்கு வயது 40 ஆகிவிட்டது, ஆனாலும் அவரது உற்சாகம் குன்றவில்லை, இப்போது கூட இந்தியாவின் சிறந்த திறமையை கொண்டு வந்து நிறுத்துங்கள் நானா அவரா என்று பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுக்கிறார் அவர்.

ஹர்பஜனின் டி20 சிக்கன விகிதம் 7 ரன்களுக்கும் கீழ்தான் 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 103 டெஸ்ட்கள் 236 ஒருநாள் போட்டிகளில் ஆடிய மூத்த வீரர் ஹர்பஜன் கூறியதாவது:

எப்போது வயதைப் பற்றி பேசலாம் எனில் பீல்டிங் செய்யும் போது கால்களுக்கு இடையில் பந்து புகுந்து செல்லும் போது பேசலாம். அல்லது த்ரோ செய்யும் அளவுக்கு தோள்பட்டை பலவீனமாகப் போனால் ஒஹோ அவருக்கு வயதாகி விட்டது எனலாம்.

ஆனால் நான் களத்தில்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன். ஆம் இந்திய கிரிக்கெட் சீருடையுடன் குறைந்தது 800 நாட்கள் களத்தில் இருந்திருப்பேன் அதாவது விளையாட்டில் களத்தில் இருந்த நேரத்தைக் கூறுகிறேன், நான் சாதனையாளன் எனக்கு யாருடைய கருணையும் தேவையில்லை.

ஆம் , திறமைகளுக்கு இடையிலான போட்டி என்றால் இந்தியாவில் சிறந்த வீரரை என் முன்னால் நிறுத்துங்கள் சவாலுக்குத் தயார், ஒரு கை பார்க்கிறேன்.

வலைப்பயிற்சியில் மாதத்துக்கு நான் 2000 பந்துகளை வீசுகிறேன் என்றால் அதுவும் நான் ஆடிய டாப் லெவல் கிரிக்கெட் அளவை வைத்துப் பார்க்கும் போது மிகவும் சிறந்ததுதானே.

நீங்கள் எனக்கு வயதாகி விட்டது என்பதை உணருமாறு செய்கிறீர்கள், ஆனால் சீரியஸாக, நான் அசாருதீன் கேப்டனாக இருக்கும் போது வந்தேன். மிகப்பிரமாதமான ஒரு பயணம், ஏற்றமும் தாழ்வும் இருப்பதுதான். இருபதாண்டுகளுக்கு நான் என் கனவை வாழ முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மேலும் நாம் சாதிக்க முடியும் என்று எப்போதுமே நினைப்போம். ஆனால் அதே வேளையில் சாதிப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளுக்கும் நன்றியுடைவராக இருக்க வேண்டும். அதாவது நாட்டுக்காக போட்டிகளை வென்று கொடுக்கும் வாய்ப்பு மற்றும் சாதனையையே குறிப்பிடுகிறேன்.

ஒவ்வொரு நாளையுமே பரீட்சை போல்தான் கருதுகிறேன். நிறைய சப்ஜெக்ட்டில் நன்றாக தேறுகிறேன். சில பேப்பர்களில் நான் நன்றாகச் செய்வதில்லை. இந்தியாவுக்காக ஆடும்போது அழுத்தம் வேண்டாமென்று நினைப்பேன், ஆனால் இப்போது அணிக்காக ஆடாமல் இருக்கும் போது அழுத்தம் இருந்தாலும் பரவாயில்லை அந்தச் சவாலையும் சந்திக்கவே ஆவலாக உள்ளது.

எல்லா வீரர்களும் சவால்களை நேசிக்கிறேன் என்று கூறுவார்கள், ஆனால் தினமும் களத்தில் நெருக்கடி அழுத்தம் ஏற்படும் போது நமக்கு ஏன் இது? நாம் இதை அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வியே எஞ்சும். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும் போது அழுத்தங்களையும் சவால்களையும் மகிழ்வுடன் எதிர்கொண்டிருக்கிறேன், காரணம் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று கூற மாட்டேன், என் உடல் நிலை பொறுத்து முடிவெடுப்பேன். 4 மாதங்கள் பயிற்சி, யோகாவுக்குப் பிறகு 2013-ல் இருந்தது போல் புதிய ஆற்றல் பெற்றுள்ளேன். 2013-ல் நான் 24 விக்கெட்டுகளை ஐபிஎல் போட்டிகளில் கைப்பற்றினேன்.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x