

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் 2011 உலகக்கோப்பையை வென்றவுமான எம்.எஸ்.தோனி குறித்த ஒரு சம்பவத்தை முன்னாள் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் பகிர்ந்து கொண்டார்.
தோனி கேப்டன் கூல், நிதானமானவர், அதே வேளையில் உறுதியானவர் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கலாம் ஆனால் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒன்று என்றால் கூட நிற்கும் குணமுடையவர் என்பதை கேரி கர்ஸ்டன் வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் சந்தித்ததிலேயே மிகவும் பிரமாதமான மனிதர் தோனி, அவர் சிறந்த தலைவர். அனைத்தையும் விட அவரது விசுவாசம் அளப்பரியது.
இந்த ஒருசம்பவத்தை என்னால் மறக்க முடியாது, 2011 உலகக்கோப்பைக்கு சற்று முன் நாங்கள் அணியாக பெங்களூருவில் உள்ள ஃபிளைட் ஸ்கூலுக்குச் செல்ல வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எங்கள் பயிற்சியாளர் குழுவில் இரண்டு அயல்நாட்டினர் இருந்தனர்.
அப்போது தோனி உட்பட அந்த ஃபிளைட் ஸ்கூலுக்குப் போக அணி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக நான், பேடி அப்டன், எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தகவலனுப்பினர்.
தோனி பார்த்தார் நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார், இவர்கள் எம் மனிதர்கள் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனில் யாரும் போக வேண்டியதில்லை என்று தோனி கூறினார், இதுதான் தோனி” என்று கேரி கர்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.