தோனி தனித்துவ வீரர்,  சிறந்த கேப்டன், ஆனால் இதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தவர்  ‘தாதா’ கங்குலிதான்: சங்கக்காரா

தோனி தனித்துவ வீரர்,  சிறந்த கேப்டன், ஆனால் இதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தவர்  ‘தாதா’ கங்குலிதான்: சங்கக்காரா
Updated on
1 min read

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? தோனியா, கங்குலியா என்ற விவாதத்தில் ஸ்ரீகாந்த், கம்பீர், ஸ்மித், சங்கக்காரா ஆகியோர் தங்கள் கருத்துக்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

இதில் சங்கக்காரா கூறும்போது, “தாதா கேப்டன்சியில் தோனி பாணி வீரர் இருக்கிறார் என்றால், அணி கொஞ்சம் வளர்ந்த நிலையில் இருந்திருந்தால் கங்குலி நிறைய ட்ராபிகளை வென்றிருப்பார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் உச்சத்தில் இருந்து கொண்டு அனைத்து அணிகளையும் வீழ்த்திக் கொண்டிருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவை கங்குலி தலைமை இந்திய அணி அதிகம் வென்றது.

நிறைய அளவுகோல்களைக் கொண்டு ஒருவரை அறுதியிடலாம். நம் காலத்துக்குப் பிறகு நாம் சிலதை விட்டுச் செல்ல வேண்டும். அந்த வகையில் தாதா கங்குலி ஒரு அருமையான மரபை விட்டுச் சென்றிருக்கிறா, மற்றவர்கள் அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

கங்குலி விட்டுச் சென்ற மரபிலிருந்து தோனி கேப்டனாக பயனடைந்தார். தோனி தனித்துவமான வீரர், பெரிய கேப்டன், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு சென்றார், ஆனால் இவையனைத்துக்கும் தாதா கங்குலிதான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்” இவ்வாறு கூறினார் சங்கக்காரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in