Published : 13 Jul 2020 14:53 pm

Updated : 13 Jul 2020 14:53 pm

 

Published : 13 Jul 2020 02:53 PM
Last Updated : 13 Jul 2020 02:53 PM

என்ன ஒரு வெற்றி! - இங்கிலாந்தை வீழ்த்திய மே.இ.தீவுகள் குறித்து விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர்  குஷி

top-display-of-test-cricket-virat-kohli-others-hail-west-indies-win-over-england

கரோனா காலத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஹோல்டர் தலைமை மே.இ.தீவுகள் வென்றதையடுத்து விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் மே.இ.தீவுகளை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.

விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில் , “வாவ்! விண்டீஸ் கிரிக்கெட்; வாட் எ வின். உயர் தர கிரிக்கெட்” என்று விதந்தோதியுள்ளார்.

மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ், “இடைவெளிக்குப் பிறகு முதல் டெஸ்ட் எங்களுக்குரியதானது. வாழ்த்துக்கள் வீரர்களே. எங்களைப் பெருமையடையச் செய்து விட்டீர்கள்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தன் பக்கத்தில், “இரு அணிகளுமே நல்ல பன்முகத் திறமையை வெளிப்படுத்தினர். பதற்றமான சூழலைல் ஜெர்மைன் பிளாக்வுட் முக்கியமான ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டார். முக்கியமான இந்த வெற்றி தொடரை அருமையான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது” என்றார்.

மைக்கேல் வான், “டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வாரம். இந்தக் காலக்கட்டத்தில் இங்கு வந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம். பிரமாதமாக ஆடி வெற்றியும் பெற்றது நம்ப முடியாதது. இங்கிலாந்து ரசிகர்களும் அதிகமாக ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து-மே.இ.தீவுகள் 2வது டெஸ்ட் ஜூலை 16ம் தேதி ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடக்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Top display of Test cricket: Virat Kohli others hail West Indies' win over Englandஎன்ன ஒரு வெற்றி! - இங்கிலாந்தை வீழ்த்திய மே.இ.தீவுகள் குறித்து விராட் கோலி சச்சின் டெண்டுல்கர்  குஷிகிரிக்கெட்இங்கிலாந்து தோல்விமே.இ.தீவுகள் வெற்றிஜேசன் ஹோல்டர்சச்சின் டெண்டுல்கர்விராட் கோலிவிவ் ரிச்சர்ட்ஸ்மைக்கேல் வான்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author