

கிரிக்கெட்டில் டபுள் என்று வர்ணிக்கப்படும் இரட்டைச் சாதனையான 4000 ரன்கள் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய 2வது ஆல்ரவுண்டரானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணிகள் ஏஜியஸ் பவுலில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிவருகின்றன. இந்த டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மே.இ.தீவுகள் வீரர் அல்ஜாரி ஜோசப்பை வெளியேற்றியதன் மூலம் 150வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 4000 ரன்கள் 150 விக்கெட் என்ற இரட்டையில் முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தமுடன் இணைந்தார்.
பென்ஸ்டோக்ஸ் இதனை 64 ஆட்டங்களில் சாதித்தார். இவருக்கு முன்னால் கேரி சோபர்ஸ் 63 டெஸ்ட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
4000 ரன்கள்150 விக்கெட் பட்டியலில் இவர்கள் இருவர் தவிர, ஜாக் காலிஸ், கபில்தேவ் ஆகியோரும் உள்ளனர். நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரியும் இருக்கிறார்.