

2005 ஆஸ்திரேலியா தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களை நிறவெறி வசை பேசி இழிவு படுத்தினார்கள் என்றும் இதனையடுத்து வீரர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பவே விரும்பினர் என்றும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஆஷ்வெல் பிரின்ஸ் இது தொடர்பாக இவருக்கு முன்பு கூறும்போது, நிறவெறி தொடராக அது அமைந்தது ஆனாலும் வீரர்கள் தொடரவே விரும்பினர் என்றார். இதனை மறுத்தே மிக்கி ஆர்தர் தற்போது ’இல்லை வீரர்கள் தொடரை முடித்து ஊர் திரும்பவே விரும்பினர்’ என்று கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் இது தொடர்பாக மிக்கி ஆர்தர் கூறும்போது, “நிறவெறிக்கு எதிராக நாங்கள் நிலைப்பாடு எடுத்தோம். அணி நிர்வாகம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் புகார் அளித்தனர், என் நினைவின்படி ஆஸி. நிறவெறி வசையினால் தென் ஆப்பிரிக்க வீரர்கல் கடும் வெறுப்பில் இருந்தனர். எந்த வீரரும் போய் ஆடுவோம் என்று கூறியதாக நினைவில்லை. ஒரு அணி மொத்தத்தையும் நிறவெறி வசை அழிக்கப்பார்த்தது. ஆஸி. கிரிக்கெட் வாரியம் எல்லைக்கோட்டருகே அதிக பாதுகாவலர்களைக் குவித்தனர்.
என்னைப்பொறுத்தவரையில் நிறவெறிக்கு இடமேயில்லை. பாகிஸ்தான், இலங்கையிலெல்லாம் நிறவெறியே கிடையாது அனைவரும் இணைந்தே இருக்கின்றனர்” என்றார்.
ஆஷ்வெல் பிரின்ஸ் தன் ட்விட்டரில், “எங்கள் தென் ஆப்பிரிக்காவில் அமைப்பு உடைந்து விட்டது. விளையாட்டிலும் சரி சமூகத்திலும் சரி நிறவெறி தலைவிரித்தாடுகிறது. தனிமப்பட்டு போய் மீண்டும் வந்துள்ளோம், ஆனால் கருப்பின வீரர் தென் ஆப்பிரிக்க அணியில் ஆட முடிவதில்லை. எங்கள் காலத்திலிருந்து சிலர் ஆடிவருகின்றனர்” என்றார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ‘கருப்பர் உயிர் முக்கியம்’ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.