Last Updated : 07 Jul, 2020 07:06 PM

 

Published : 07 Jul 2020 07:06 PM
Last Updated : 07 Jul 2020 07:06 PM

தோனி பிறந்த தினத்துக்கு வித்தியாசமான  ‘மெசேஜ்’ உடன் மும்பை போலீஸ் ருசிகர வாழ்த்து 

ஜார்கண்ட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் 39வது பிறந்த தினம் ஜூலை 7ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இவருக்கு வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் மும்பை போலீஸ் மேலும் வித்தியாசமாக கரோனா கால விழிப்புணர்வு செய்தியுடன் தோனியின் பிறந்த தின வாழ்த்தையும் கச்சிதமாகக் கலந்துள்ளது.

மகேந்திர சிங் தோனி என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களான MSD என்பதை மெய்ன்டெய்ன் சோஷியல் டிஸ்டன்சிங் (Maintain Social Disatancing) என்பதாக மாற்றி டூ இட் த மாஹி (தோனி) வே, ஸ்டே நாட் அவுட், ஸ்டே கூல் & ஸ்டம்ப் கரோனா வைரஸ், ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் என்று சுவாரசியமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இன்று கரோனா வைரஸ் தொற்று 7 லட்சத்தைக் கடந்தது. பல தரப்புகளிலிருந்தும் தோனிக்கு இன்று வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தோனியின் சிஎஸ்கே சக வீரரான மே.இ.தீவுகளின் ட்வைன் பிராவோ ஒரு பாடலையே தோனிக்காக அர்ப்பணித்துள்ளார்.

இந்தப் பாடல் ‘ஹெலிகாப்டர் 7’ என்று தலைப்பு கொண்டது. இதில் இதுவரை தோனி செய்த சாதனைகளை பட்டியலிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x