Last Updated : 06 Jul, 2020 05:03 PM

 

Published : 06 Jul 2020 05:03 PM
Last Updated : 06 Jul 2020 05:03 PM

மட்டைப் பிட்சில் டாப் ஆர்டர் மட்டுமே ஆடினால் போதாது, 20/3 என்றால் இந்திய அணி அவ்வளவுதான்: நாசர் ஹுசைன் மதிப்பீடு 

இந்திய அணியின் டாப் ஆர்டர் அரிதாகவே சரியாக ஆடாமல் போகிறது, இதனால் நடுவரிசை வீரர்க்ளுக்கு களத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் ஐசிசி தொடர்களில் மாற்றுத் திட்டமில்லாமல் இந்திய அணி திணறுகிறது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2014-ல் யுவராஜ் சிங் கடைசியில் பேட்டிங்கில் ரன் எடுக்க முடியாமல் சொதப்பினார். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் டாப் ஆர்டர் காலியானவுடன் இந்திய அணி கவிழ்ந்தது, 2019- உலகக்கோப்பையில் டாப் ஆர்டர் வீழ்ச்சிக்குப் பின் அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோற்று வெளியேறியது

இந்நிலையில் கிரிக்கெட் கனெக்ட்டெட் என்ற நிகழ்ச்சியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் நாசர் ஹுசைன் கூறியதாவது:

ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் பிரச்சினை அணித்தேர்வில் உள்ளது என்றே நான் கருதுகிறேன். பிறகு பிட்ச் உள்ளிட்ட சூழல்களுக்கு சரியாக தகவமைத்துக் கொள்ள முடியவில்லை, ஒரேயொரு ஆட்டத் திட்டம் வைத்திருந்தால் போதாது.

நியூஸிலாந்துக்கு எதிராக பந்துகள் ஸ்விங் ஆகிறது, 20/2, கோலி, ஷர்மா அவுட் உங்கள் மிடில் ஆர்டர் எங்கே சென்றது?

டாப் ஆர்டர் மிகவும் நன்றாக ஆடுவது மிடில் ஆர்டர் சரியல்ல என்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் தவறாகும். பிட்ச் நன்றாக பேட்டிங் சாதகமாக மட்டை ஆடுகளமாக இருந்தால் ஓகே கோலி சதம், ஷர்மா சதம், ஆனால் மிடில் ஆர்டருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் ஆட்டச் சூழலில் அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமல் போகும்போது டாப் ஆர்டர் தோல்வியடையும்போது மிடில் ஆர்டர் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் போகிறது

தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்து விட்டால் இந்திய அணியிடம் பதில் எதுவும் இல்லை.

திடீரென நீங்கள் 20/3 என்று ஆகிவிட்டால், ஏனெனில் நீங்கள் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற பவுலர்களை ஆடும்போது அனைத்து வீரர்களும் ஆட வேண்டும் எனும்போது போதிய மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் உடனடியாக 4 விக்கெட்டுகள் என்றால் எப்படி மீள்வது?எனவே இன்னொரு திட்டம் அதாவது பிளான் பி தேவை.

கோலி சுயம்புவானவர், சில விஷயங்களில் அவர் சிறப்பாக உள்ளார், ஆனால் இன்னும் கேப்டன்சியில் சில இடங்களில் அவர் தேற வேண்டும்.

ஒவ்வொரு ஓவரும் களவியூகத்தை மாற்றுகிறார், அவரே ஓடிப்போய் மாற்றங்களைச் செய்கிறார், இதைக் கொஞ்சம் அவர் அதிகப்படியாகச் செய்வதாகப் படுகிறது.

இந்திய அணி நிறைய விஷயங்களை நன்றாகச் செய்கிறது, ஆனால் அணித்தேர்வு இதில் ஒன்றாக இல்லை என்பதே என் கருத்து.

உலகக்கோப்பைக்கு வந்தால், உங்கள் 4ம் நிலை வீரர் யார் என்று தெரியாமல் வருவது எப்படி சரியாகும். அதுவும் சிறந்த பேட்ஸ்மென்களை வைத்துக் கொண்டு 4ம் நிலைக்கு திணறினால் எப்படி? கேப்டன்சி என்பது வெற்றி பெற வேண்டும் என்பதுதானே.

கேப்டனாக கோலியின் சாதனை சிறந்த கேப்டன்களின் வரிசையில் இருப்பதற்கான அனைத்து கூறுகளையும் கொண்டது என்பதில் ஐயமில்லை. அணித்தேர்வு என்ற ஒரு இடம் இந்திய அணி சரியாகத் திட்டமிட வேண்டியுள்ளது.

இவ்வாறு கூறினார் நாசர் ஹுசைன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x