தாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர் ஹுசைன் புகழாரம்

தாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர் ஹுசைன் புகழாரம்
Updated on
1 min read

நாட்வெஸ்ட் ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் கங்குலி இந்தியா வெற்றி பெற்ற பிறகு தன் சட்டையைக் கழற்றி சுழற்றியதை யாரும் மறக்க முடியாது, தன்னாலும் மறக்க முடியாது என்கிறார் அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன்.

கிரிக்கெட் இன்சைடு அவுட் என்ற நிகழ்சிக்காக இயன் பிஷப் மற்றும் எல்மா ஸ்மிட்டிடம் நாசர் ஹுசைன் பேசும்போது, “இந்தியாவுக்கு எதிரான 2002 நாட்வெஸ்ட் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது எனக்கு அவ்வளவாக பிடிக்காத போட்டி என்று இரட்டை மனநிலையை ஏற்படுத்திய போட்டி.

அந்தத் தலைமுறையில் அந்தப் போட்டி மிகப்பெரிய ஒருநாள் போட்டியாகும். இந்தியா இறுதிப்போட்டிக்கு நீண்டகாலமாக தகுதி பெறாமலே இருந்தது. இறுதியில் தோல்வி அடைவது போல்தான் இருந்தனர்.

கங்குலிக்கு எதிராக ஆடுவதை நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே எதிர்கொண்டுள்ளேன். நான் எப்போதும் கூறிவருவது என்னவெனில் கங்குலிதான் இந்திய கிரிக்கெட் அணியை கடினமாக்கினார். அதற்கு முன்னதாக சேர்ந்து விளையாட மிகவும் மென்மையான வீரர்களாக இருந்தனர். சவுரவ்தான் உறுதியான அணியாக அதை மாற்றினார்.

அதுவும் இறுதியில் வென்ற பிறகு சட்டையைக் கழற்றி சுழற்றினாரே, அதுதான் சவுரவ் கங்குலியின் முத்திரை. நான் அவரது மிகப்பெரிய விசிறி” என்றார் நாசர் ஹுசைன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in