

2000-ம் ஆண்டிற்குப் பிறகு சவுரவ் கங்குலிதான் இந்திய அணியை ஒரு சக்தியாகக் கட்டமைத்தார்.
சூதாட்ட சர்ச்சைகளிலிருந்து இந்தியாவை மீட்டுக் கொண்டு வந்தது தாதா கங்குலியே, மேலும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அவர்கள் வளர பொறுமை காத்த கேப்டன் கங்குலியே என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வாசிம் ஜாஃபர் கூறியிருப்பதாவது:
2000-ம் ஆண்டிற்குப் பிறகு சவுரவ் கங்குலிதான் இந்திய அணியை வளர்த்தெடுத்தார். அவரிடம் பொறுமை இருந்தது , அணி வீரர்களுக்கு முழு ஆதரவு அளித்தார், நிறைய வாய்ப்புகளை அளித்தார். சேவாகை தொடக்க வீரராக்கியது கங்குலிதான், ஜாகீர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார்.
இவ்வாறு கூறினார் வாசிம் ஜாஃபர்.