

2011 உலகக்கோப்பையை தோனி தலைமை இந்திய அணி இலங்கையை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வென்றது, ஆனால் இந்த ஆட்டம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது, சூதாட்டம் நடந்துள்ளது என்று இலங்கை முன்னாள் அமைச்சர் அலுத்கமகே கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இதற்கு வீரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இலங்கை போலீஸார் அப்போதைய இலங்கைத் தேர்வுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, கேப்டன் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனே, உபுல் தரங்கா, விசாரணை நடத்தினர்.
முடிவில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர். ஐசிசி ஊழல் தடுப்பு குழு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல், 2011 உலகக்கோப்பை குறித்து எங்களுக்கு ஏதும் சந்தேகம் எழவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் சங்கக்காராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.