நல்ல அணித்தலைவர்கள் கிடைத்துள்ளனர்: கோலி, ஸ்மித்துக்கு ஸ்டீவ் வாஹ் பாராட்டு

நல்ல அணித்தலைவர்கள் கிடைத்துள்ளனர்: கோலி, ஸ்மித்துக்கு ஸ்டீவ் வாஹ் பாராட்டு
Updated on
1 min read

தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனமான வாஹ் குளோபல் ரியல்டி சார்பான நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கோலி, ஸ்மித் குறித்து...

இளம் வயதில் திறமை மிக்க அணித் தலைவர்களை இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட காலம் தலைமைத்துவத்தில் சேவையாற்றுவர். இருவரும் உலகின் சிறந்த பேட்ஸ்மென்கள், ஆகச் சிறந்த பேட்ஸ்மென்கள் என்று இப்போதைக்கு கூற முடியாவிட்டாலும் கூட இருவரும் திறமையான ஆட்டக்காரர்கள். இருவருக்கும் நல்ல கிரிக்கெட் மூளை உள்ளது. இருவருமே நாட்டுக்காக ஆடுவதை மிகவும் நேசிப்பவர்கள். இனி வரும் காலங்களில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆடும்போது பார்ப்பதை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உண்மையான ஆல்ரவுண்டர்கள் குறித்து

உண்மையான ஆல்-ரவுண்டர்கள் அருகி வரும் ஒரு பிரிவினர் ஆகிவிட்டனர். ஏனெனில் உண்மையான ஆல்ரவுண்டராக உருவாவது என்பது உடல்/மன ரீதியாக மிகவும் கடினமான உழைப்பை வேண்டுவது. கிரிக்கெட் ஆட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்க தற்போது மேற்கொள்ளப்படும் பயிற்சி இரட்டிப்பாக்கப் படவேண்டும். நிறைய கடின உழைப்பு தேவை. வலுவாக இருப்பதும் அவசியம்.

கடந்த காலத்தின் மிகப்பெரிய ஆல்ரவுண்டர்கள் அனைவருமே இயல்பாகவே வலுவான வீரர்கள். காயங்கள் அதிகம் அவர்களை பாதித்ததில்லை.

இவ்வாறு ஸ்டீவ் வாஹ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in