கிரிக்கெட் ஆடுவதற்கென்றே பிறந்த வீரர்கள்: 1983 உ.கோப்பை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’ பற்றி ஸ்ரீகாந்த்

கிரிக்கெட் ஆடுவதற்கென்றே பிறந்த வீரர்கள்: 1983 உ.கோப்பை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’ பற்றி ஸ்ரீகாந்த்
Updated on
1 min read

இந்திய அணி முதன் முதலில் உலகக்கோப்பையை எங்கிருந்தோ வந்து வென்றதன் 37வது ஆண்டுக் கொண்டாட்டம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அந்த அணியின் பிரதான வீரரான அப்போதைய அதிரடி ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அந்த தினத்தை நினைவுகூர்ந்து கூறும் போது, “முந்தைய 2 உலகக்கோப்பைகள் இந்தியாவுக்கு பெரிய அழிவுதான், அந்த நிலையில்தான் 1983 உ.கோப்பைக்குச் சென்றோம், 1975,79-ல் நாம் ஒன்றுமே செய்யவில்லை.

இரண்டு முறையும் மே.இ.தீவுகள் உலகக்கோப்பையை வென்ற நிலையில் இந்தியாவுக்கு யாரும் சந்தேகத்தின் பலனைக் கூட அளிக்கவில்லை.

இந்தியா இவ்வளவு தூரம் வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் முடிவு புரட்சிகரமானதாக மாறியது. இந்த வெற்றி ஒருநாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றியது. இது எங்களுக்கெல்லாம் திருப்பு முனையாக மாறியது. லார்ட்சில் கபில்தேவ் உலகக்கோப்பையை தூக்கிய தருணம் வளரும் வீரர்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள வழிவகை செய்தது. கிரிக்கெட்டை இது புரட்சிமயப்படுத்தியது.

பெரிய நினைவுச்சின்ன வெற்றி அது, இந்திய கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றியது. இதைத் தொடர்ந்து 1985ல் பென்சன் ஹெட்ஜஸ் கோப்பையையும் வெல்ல நாட்டில் குறைந்த ஓவர் கிரிக்கெட் தன்மை மாறியது.

என்னைப் பொறுத்தவரை வேறு தலைமுறைகளைச் சேர்ந்த வீரர்களை, அணிக்களை ஒப்பிடுவது சரியில்லை என்றே கருதுகிறேன். 83 அணி முற்றிலும் வித்தியாசமான அணி, முழுக்கவும் ஆல்ரவுண்டர்களாக இருந்தனர், அவர்கள் பலதரப்பட்ட பங்களிப்பை செய்தனர். அந்த அணி நல்ல பீல்டிங் அணி. இயற்கையான ஒரு திறமையுடன் இருந்த அணி அது, கிரிக்கெட் ஆடவென்றே பிறந்த அணி வீரர்கள் ஆவார்கள் இவர்கள்.

இப்போதுள்ள விராட் கோலி தலைமை அணி உலக அணிகளை வீழ்த்தும் அணியாகும். ரோஹித் ராகுல் போன்ற தரமான வீரர்கள், பும்ரா, இஷாந்த் போன்ற பவுலர்கள். அனைத்து அடிப்படைகளும் நிரம்பிய அணி, 2019 உலகக்கோப்பையில் இந்த அணியை வைத்துக் கொண்டு சும்மா நியூஸிலாந்தை பந்தாடியிருக்க வேண்டமா? ஒப்பிடுதல் நியாயமற்றது, ஆனால் 83 அணியும் இப்போதைய அணியும் தரமான அணிகள்.” இவ்வாறு கூறினார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in