Published : 24 Jun 2020 01:00 PM
Last Updated : 24 Jun 2020 01:00 PM

கடந்த 50 ஆண்டுகளில்  ‘கிரேட்டஸ்ட் இந்தியன் பேட்ஸ்மேன்’ராகுல் திராவிட்:  சச்சின், கவாஸ்கர், கோலியைப் பின்னுக்குத் தள்ளினார்

மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின், முந்தைய லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ராகுல் திராவிட் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இந்திய வீரர் என்று விஸ்டன் இந்தியா கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வென்றுள்ளார்.

மொத்த வாக்குகள்ல் 52% பெற்ற ராகுல் திராவிட் முதலிடம் பிடித்தார், சச்சின் டெண்டுல்கர் 48% வாக்குகளுடன் 2ம் இடம் பிடித்தார். சுனில் கவாஸ்கர் 3ம் இடம் பிடித்தார்.

100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரைக் காட்டிலும் ராகுல் திராவிட் ஆகச்சிறந்த பேட்ஸ்மெனாக தேர்வாகியிருப்பது ஆச்சரியமே.

மொத்தம் 11,400 ரசிகர்கள் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில் மதியம் வரை ராகுல் திராவிட் பின் தங்கியிருந்தார். ஆனால் டெஸ்ட்டில் மெதுவாக தொடங்கி ஆடிக்கொண்டே இருப்பது போல் இவருக்கான வாக்குகளும் மெதுவே பிறகு அதிகரிக்க சச்சின் டெண்டுல்கரை முந்தினார்.

சுனில் கவாஸ்கர் 3ம் இடத்திலும் விராட் கோலி 4ம் இடத்திலும் முடிந்தனர். 3ம் 4ம் இடத்துக்கான போட்டியில் கவாஸ்கர் கோலியை முறியடித்து 3ம் இடத்தைப் பிடித்தார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களையும் திராவிட் 13,288 ரன்களையும் எடுத்துள்ளனர். கவாஸ்கர் 10,122 ரன்களை 125 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார்.

2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில் திராவிட் முதல் இன்னிங்சில் 233 ரன்களையும் 2வது இன்னிங்ஸில் 78 ரன்களையும் எடுக்க இந்திய அணி கங்குலி தலைமையில் பிரமாதமான டெஸ்ட் வெற்றியை ஆஸி.மண்ணில் நிகழ்த்திக் காட்டியது. தொடரையும் நாம் சமன் செய்தோம்.

ஒரே டெஸ்ட்டில் 300க்கும் மேற்பட்ட ரன்களை நான் கூட எடுத்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் இந்த இன்னிங்ஸை விதந்தோதினார் அப்போதே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x