

மற்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட அனுமதிக்கப்படும்போது இந்திய வீரர்களையும் அயல்நாட்டு லீகுகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்காக வீரர்கள் விண்ணப்பித்து அனுமதி பெறும் வகையில் புதிய விதிமுறைகளை பிசிசிஐ வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
பிசிசிஐ இந்திய வீரர்களை அயல் லீகுகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் இல்லாத, இனி இந்திய அணியில் தேர்வு செய்யப்போவதில்லை என்ற வீரர்களை வெளி லீகில் ஆட அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுக்க வேண்டும். 50 டெஸ்ட் விளையாடிய அல்லது 35 வயதான கிரிக்கெட் வீரர்கள் இதற்கு விண்ணப்பித்து சம்மதம் பெறும் முறையை பிசிசிஐ அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
முன்னதாக சுரேஷ் ரெய்னா, முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இர்பான் பத்தான் ஆகியோரும் இந்திய வீரர்களை அயல்நாட்டு லீகுகளில் ஆட அனுமதிக்க கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.