

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள வேண்டுகிறேன் என, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அப்ரீடிக்கும், கம்பீருக்கும் சில நாட்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு தோன்றியது.,பிரதமர் மோடி குறித்தும் காஷ்மீர் குறித்தும் அப்ரீடி தெரிவித்த கருத்துக்கு கம்பீர் காட்டமாக பதிலளித்தார், கம்பீரை யுவராஜ், ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்கள் ஆதரித்தனர்.
கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற பின்னும், பாக்., கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வரும் ஷாகித் அப்ரிடி, தனது தொண்டு நிறுவனம் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அப்ரிடி டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்.பி.,யுமான கவுதம் காம்பீர், அப்ரிடி குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், கரோனா பாதிப்பிலிருந்து அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.