நானும், அஸ்வினும் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்போம்: சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சூளுரை

நானும், அஸ்வினும் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்போம்: சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சூளுரை
Updated on
1 min read

நானும், அஸ்வினும் இணைந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. அதற்காக பெங்களூரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அமித் மிஸ்ரா மேலும் கூறியதாவது:

நானும் அஸ்வினும் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்போம். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவதில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இணைந்து பந்துவீசுவதால் இருவரும் விக்கெட் வீழ்த்துவோம் என்று அர்த்தமில்லை. ஒருவர் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தும்போது மற்றொருவர் விக்கெட் வீழ்த்தலாம்.

தென் ஆப்பிரிக்க தொடர் கடும் சவாலான தொடராக இருக்கும். ஆனால் நாங்களும் தலைசிறந்த அணிதான். கொஞ்ச காலமாகவே எங்கள் அணியில் உள்ள எல்லா வீரர்களுமே தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடுகளத்தின் தன்மை குறித்தெல்லாம் சிந்திப்பதில்லை. ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் தெரியாது. எனவே ஆடுகளத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டி கேப்டன் எம்.எஸ்.தோனி ஆகியோர் வீரர்களுக்கு நல்ல ஆதரவு அளிப்பதால் அனைவரும் மிகுந்த மன உறுதியோடு உள்ளனர். அது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். நான் அணியில் இடம்பெறுவேனா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. எனது பவுலிங் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்துவதில்தான் கடந்த 4 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறேன். அதுதான் எனது ஆட்டம் மேம்பட உதவியது. அதனால்தான் இலங்கைத் தொடரில் சிறப்பாக ஆட முடிந்தது என்றார்.

உங்களின் பேட்டிங்கை எப்படி மேம்படுத்தினீர்கள் என மிஸ்ராவிடம் கேட்டபோது, “உத்தப் பிரதேச அணியின் கேப்டனாக இருந்த காலம்தான் எனது பேட்டிங்கை மேம்படுத்தியது. நான் எப்போதுமே எனது பவுலர்கள் 50 முதல் 60 ரன்கள் வரை சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதுதான் போட்டியின் முடிவை மாற்றக்கூடியதாக இருக்கும். கேப்டனாக இருந்த போது, ரன் குவிக்கும் பொறுப்பை என் தோளில் போட்டுக்கொண்டு கடை நிலை வீரர்களுடன் இணைந்து ரன் சேர் ப்பேன்.

அதைத்தான் இந்திய அணிக்காக ஆடியபோது செய் தேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in