ஐபிஎல் தொடரில் நிறவெறி இழிசொல்லா? - குண்டைத் தூக்கிப் போடும் டேரன் சமி

ஐபிஎல் தொடரில் நிறவெறி இழிசொல்லா? - குண்டைத் தூக்கிப் போடும் டேரன் சமி
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய போது தான் நிறவெறி வசைக்கு ஆளானதாக மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் டேரன் சமி அதிர்ச்சிப் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட் போலீஸால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்த டேரன் சமி, ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்,நிறவெறிக்கு எதிராக இப்போது குரல் கொடுக்காவிட்டால் எப்போது கொடுக்கப் போகிறோம் என்று மனசாட்சியை தட்டி எழுப்பினார்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் நிறவெறி வசையை தன் மீதும் இலங்கை வீரர் பெரேராவையும் நிறவெறி வசையினால் அழைத்ததாக அவர் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

“சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடும்போது என்னையும் பெரேராவையும் ‘kalu’ என்று அழைப்பார்கள் அப்படி என்றால் என்ன என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னையும் இலங்கை வீரர் பெரேராவையும் அப்படித்தான் அழைப்பார்கள். இதன் அர்த்தம் ஏதோ பொலிக்குதிரை என்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அது வேறு அர்த்தம், இழி சொல் என்று தெரிந்தவுடன் கோபமடைந்தேன்.

இந்தப் பெயரைச் சொல்லித்தான் சன்ரைசர்ஸுக்கு ஆடும்போது என்னையும்பெரேராவையும் இந்தியாவில் அழைத்தனர். வலுவான கருப்பு மனிதன் என்றுதான் கூறுகிறார்கள் என்று நினைத்தேன், ஆனால் இப்போது அதன் அர்த்தம் எனக்கு கோபமூட்டுகிறது” என்றார். kalu என்ற இந்தி வார்த்தைக்கு கருப்பன் என்று பொருள் என்று கூறப்படுகிறது, இது இழிசொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு நிறைய கூற்றிட ஆதாரங்கள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in