Last Updated : 06 Sep, 2015 12:53 PM

 

Published : 06 Sep 2015 12:53 PM
Last Updated : 06 Sep 2015 12:53 PM

ஆசிய தரவரிசை: ககன் நரங் முதலிடம்

ஆசிய அளவிலான ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் துப்பாக்கி சுடுதல் தரவரிசையில் இந்திய வீரர் ககன் நரங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2012 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான ககன் நரங், மீண்டும் பார்முக்கு திரும்பியதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார். 32 வயதான நரங் 971 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனாவின் ஷெங்பாவ் ஸாவ் 896 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு இந்தியரான ஜிது ராய், ஆடவர் 50 மீ. பிஸ்டல் பிரிவில் 1,929 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென் கொரியாவின் ஜாங்கோ ஜின் முதலிடத்தில் உள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பவருமான இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 5-வது இடத்தில் உள்ளார்.

காயத்தால் அவதிப்பட்டு வந்த ககன் நரங், கடந்த மே மாதம் அமெரிக்காவின் போர்ட் பென்னிங் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50 மீ. ரைபிள் புரோன் பிரிவில் வெண்கலம் வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டார். இதேபோல் ஜிது ராயும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் அவர் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x