Published : 02 Jun 2020 04:59 PM
Last Updated : 02 Jun 2020 04:59 PM

இங்கிலாந்தில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்காவுக்கு ஆடுவேன்: கிரிக்கெட் வீரர் லியாம் பிளங்கெட்

இங்கிலாந்து அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்க அணிக்கு ஆடத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட் தெரிவித்துள்ளார்.

35 வயதான லியாம் பிளெங்கெட் தனது உயரம் மற்றும் ஸ்விங்கினால் பல பேட்ஸ்மென்களைத் திணறடித்துள்ளதோடு பின்வரிசையில் அதிரடி காட்டும் ஒரு பேட்ஸ்மெனும் கூட.

இங்கிலாந்து ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் பிளங்கெட் இல்லை, அடுத்தடுத்த தொடர்களுக்காக பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 55 உத்தேச வீரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெறவில்லை.

பிளங்கெட் மனைவி அமெரிக்கர், எனவே இங்கிலாந்தில் வாய்ப்பு இல்லாவிட்டால் அமெரிக்க அணிக்கு ஆடுவேன் என்கிறார் பிளங்கெட்.

இதற்காக பிளங்கெட் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிக்க வேண்டும்.

“இன்னும் என்னால் இங்கிலாந்துக்காக ஆட முடியும். உலககக்கோப்பைக்குப் பிறகு பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. இங்கிலாந்து அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நல்ல உடற்தகுதியில் இருந்தும் எனக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் நான் ஏன் அமெரிக்க அணியை தேர்வு செய்யக்கூடாது?

கிரீன் கார்ட் பெற்று அமெரிக்க கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்னால் உதவ முடியும் என்கிறார் லியாம் பிளங்கெட்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x