Published : 02 Jun 2020 14:58 pm

Updated : 02 Jun 2020 14:58 pm

 

Published : 02 Jun 2020 02:58 PM
Last Updated : 02 Jun 2020 02:58 PM

வீட்டின் அருகிலேயே இலவச உணவு மையம் ; புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சேவையில் இறங்கிய மொகமட் ஷமி: உணவு மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்

mohammed-shami-distributes-food-and-masks-to-migrants-amid-covid-19-crisis

உத்தரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் முகக்கவசங்களையும் வழங்கி சமூக சேவையில் இறங்கினார்.

மேலும் சஹஸ்பூரில் தன் இல்லத்தருகிலேயே உணவு விநியோக மையத்தையும் திறந்துள்ளார் ஷமி.

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் கிரிக்கெட் வீரர் மொகமட் ஷமி, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து சொந்த ஊருக்குப் போகும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தானே முகக்கவசம் உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.

முன்னதாக சவுரவ் கங்குலி 2000 கிலோ அரிசியை ஏழைகளின் உணவுக்காக வழங்கினார். விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு பெரிய அளவில் ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Mohammed Shami distributes food and masks to migrants amid COVID-19 crisisவீட்டின் அருகிலேயே இலவச உணவு மையம் ; புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சேவையில் இறங்கிய மொகமட் ஷமி: உணவு மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கிரிக்கெட்மொகமட் ஷமிஇந்தியாபிசிசிஐபுலம்பெயர் தொழிலாளர்கள்உணவுமுகக்கவசம்சமூகசேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author