

உத்தரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் முகக்கவசங்களையும் வழங்கி சமூக சேவையில் இறங்கினார்.
மேலும் சஹஸ்பூரில் தன் இல்லத்தருகிலேயே உணவு விநியோக மையத்தையும் திறந்துள்ளார் ஷமி.
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் கிரிக்கெட் வீரர் மொகமட் ஷமி, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து சொந்த ஊருக்குப் போகும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தானே முகக்கவசம் உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.
முன்னதாக சவுரவ் கங்குலி 2000 கிலோ அரிசியை ஏழைகளின் உணவுக்காக வழங்கினார். விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு பெரிய அளவில் ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.