Last Updated : 06 Aug, 2015 09:40 AM

 

Published : 06 Aug 2015 09:40 AM
Last Updated : 06 Aug 2015 09:40 AM

இந்தியா-இலங்கை இடையிலான பயிற்சிப் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா-இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது.

கோலி தலைமையில் இந்திய அணி முதல்முறையாக முழு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில் கோலியும், சகவீரர்களும் தீவிரமாக உள்ளனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை யில் ஷிகர் தவன்-முரளி விஜய் ஜோடி நல்ல தொடக்கம் ஏற்படுத் தித் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது. சமீப காலமாக பார்மில் இல்லாத கோலி, இந்த பயிற்சி போட்டியின் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் தீவிரமாக இருக்கிறார். மிடில் ஆர்டரில் கோலியைத் தவிர புஜாரா, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், புவனேஸ் வர் குமார் அல்லது உமேஷ் யாதவ் இடம்பெறலாம். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இலங்கை வாரியத் தலைவர் அணி, லஹிரு திரிமானி தலைமையில் களமிறங்குகிறது. சர்வதேசப் போட்டியில் விளையாடி வரும் உபுல் தரங்கா, கவுஷல் சில்வா, குசல் பெரேரா, லஹிரு கேமேஜ், பதிரானே போன்றோர் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

மிரட்டும் மழை

போட்டி நடைபெறவுள்ள 3 நாட்களும் கொழும்பில் 80 சதவீத மழை வாய்ப்புள்ளது. எனவே வருண பகவான் வழிவிட்டாலொழிய இந்தப் போட்டி நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் இந்திய வீரர்கள் தங்களின் முதல் பயிற்சியை உள் விளையாட்டரங்கில்தான் மேற்கொண்டனர்.

இந்தியா:

முரளி விஜய், ஷிகர் தவன், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, சேதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா.

இலங்கை:

தனஞ்ஜெய் டி சில்வா, கவுஷல் சில்வா, லஹிரு திரிமானி (கேப்டன்), உபுல் தரங்கா, மிலின்டா வர்த்தனா, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), ஷேஹன் ஜெயசூர்யா, நிசாலா திரக்கா, காசுன் ரஜிதா, விஸ்வா பெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே, லஹிரு ஹேமேஜ், தனுஸ்கா குணாட்டிலெகே, சசித் பதிரானே, நிரோஷன் டிக்வெல்லா.

போட்டி நேரம்: காலை 10

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x