பாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன  பென் ஸ்டோக்ஸ் மறுப்பு

பாக். அணியை வெளியேற்ற 2019 உ.கோப்பையில் இங்கி.யிடம் இந்தியா தோற்றது என்று நான் சொல்லவே இல்லை: பதறிப் போன  பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
Updated on
1 min read

2019 ஐசிசி உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று இங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது, இதுகுறித்த சர்ச்சைகள் சில காலமாக ஓடிக்கொண்டிருந்தன.

குறிப்பாக பென்ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு ஓவர் த்ரோ 4 ரன்களுக்குச் சென்றது இறுதிப் போட்டியில் திருப்பு முனையாக அமைந்த்து, ஆனால் ஆட்டம் டை ஆக, சூப்பர் ஓவரிலும் டை ஆக, பவுண்டரிகள் கணக்கு என்ற முறையில் இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது, இது தொடர்பாக கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து வெற்றி மீது பலரும் கேலிப்பார்வையை வைத்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் நாக் அவுட் வாய்ப்பை காலி செய்யவே இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்ற பேச்சும் அடிபட்டது.

பென் ஸ்டோக்ஸ் இதனை தன் புத்தகத்தில் குறிப்பிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சிகந்தர் பக்த் குண்டு ஒன்றைத் தூக்கிப்போட தான் அப்படிக் கூறவேயில்லை என்று பென்ஸ்டோக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் ட்விட்டர் தளத்தில் சிகந்தர் பக்த்துக்கு மறுப்பு தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், “உங்களால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாது, காரணம் நான் அப்படி கூறவேயில்லை. இதுதான் வார்த்தைகளைத் திரிப்பது, பரபரப்பு தலைப்பு என்பதாகும்.” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் இந்தியா தோல்வியடைந்தது, ஆனால் இந்தியா நினைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றே பலருக்கும் தோன்றியது. தோனி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

பென் ஸ்டோக்ஸ் எழுதிய ‘ஆன் ஃபயர்’ என்ற புத்தகம் இனிமேல்தான் வெளிவரப்போகிறது, இதில் ஒவ்வொரு போட்டியையும் பென்ஸ்டோக்ஸ் பகுத்தாய்ந்து எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in