Last Updated : 28 May, 2020 06:53 PM

 

Published : 28 May 2020 06:53 PM
Last Updated : 28 May 2020 06:53 PM

இந்தியா-ஆஸி. தொடர்: பெர்த்தில் டெஸ்ட் இல்லை- 4 மைதானங்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடருக்கான 4 மைதானங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அதிவேக ஆடுகளமான பெர்த் இம்முறை இடம்பெறவில்லை.

ஆக, கரோனா பிரச்சினை இருந்தாலும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த ஆஸ்திரேலியா முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

டிசம்பர் 3-7 முதல் டெஸ்ட் பிரிஸ்பன்

டிசம்பர் 11-15 -2வது டெஸ்ட் (பகலிரவு டெஸ்ட்) -அடிலெய்ட்

டிசமர் 26-30 -3வது டெஸ்ட் (பாக்சிங் டே) - மெல்போர்ன்

ஜனவரி 3-7 -4வது இறுதி டெஸ்ட் - சிட்னி.

முன்னதாக 4 டெஸ்ட்களையும் ஒரே மைதானத்தில் ஆடுவதாகத் திட்டமிடப்பட்டது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணிக்கு முன்பாக ஆப்கான் அணியுடன் ஆஸ்திரேலிய அணி நவம்பர் 21-25-ல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதுவும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாகும்.

உலகக்கோப்பை டி20-யை அனைவரும் சேர்ந்து நிச்சயமின்மைக்குக் கொண்டு சென்றனர். அதனால் ஐபிஎல் நம்பிக்கை துளிர் விடத்தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x