கோப்புப் படம்.
கோப்புப் படம்.

லாக்டவுன் பலரையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றி விட்டது:  ‘தோனி ரிட்டையர்ஸ்’ ஹேஷ்டேக் குறித்து சாக்‌ஷி தோனி சாடல்

Published on

தோனியே ஓய்வு அறிவித்து விட்டாலும் அவர் ஓய்வு பெறுவது பற்றிய ட்விட்டர்வாசிகளின் பேச்சுக்கு ஓய்வில்லை போல் தெரிகிறது. மீண்டும் தோனி ஓய்வுபெறுகிறார் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வலம் வர தோனியின் மனைவியை அது எரிச்சலையடைச் செய்துள்ளது.

#Dhoniretires என்ற ஹேஷ்டேக் மீண்டும் ஒரு வலம் வர எரிச்சலடைந்த தோனியின் மனைவி சாக்‌ஷி ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்களிடம் கூறுமாறு, “இவை வதந்திகள் மட்டுமே ! லாக்டவுன் மனிதர்களின் மனநலத்தை பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்கிறேன்” என்று சற்றே காட்டமாக நெடிச்சன்களைச் சாடியுள்ளார்.

ஆனால் இதன் விளைவுகளை உணர்ந்தோ என்னவோ சாக்‌ஷி தோனி தனது ட்வீட்டை நீக்கிவிட்டாலும் அதற்கு முன்பாகவே பலரும் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து விட்டனர். இது தற்போது வைரலானது.

2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. இந்திய அணி தேர்வுக்குழுவும் தோனியைத் தாண்டி யோசிக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது, ரிஷப் பந்த்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றுவெளிப்படையாகவே சொல்லி விட்டனர்.

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்திலும் தோனி இடம்பெறவில்லை, அவரும் தன் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி ஒன்றும் கூறாததால் அவர் ஓய்வு பற்றிய ஹேஷ்யங்கள் வலம் வரத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in