

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று கூறியதாவது:
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் டி 20 தொடர் நடத்துவதற்கான அனுமதியை வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இதை பிசிசிஐ முடிவு செய்ய முடியாது. அதுவும் நாடு முழுவதும் கரோனா வைரஸ்தொற்று எவ்வாறு கட்டுக்குள் உள்ளது என்பதை பொறுத்தேஅமையும். பொது சுகாதாரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாவிட்டால் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியும்.
விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும் அதற்காக நாட்டின் ஆரோக்கியத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.
இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட 530 மில்லியன் டாலர் மதிப்புடையது மற்றும் சிறந்த சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களை இந்த தொடர் ஈர்க்கிறது. வருமானம் கொட்டும் இந்த கிரிக்கெட் தொடர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.