இது புதுசு! - ஐபிஎல் கிரிக்கெட்டினால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்ததாம்- ஜோஸ் பட்லர்

இது புதுசு! - ஐபிஎல் கிரிக்கெட்டினால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்ததாம்- ஜோஸ் பட்லர்
Updated on
1 min read

ஐபிஎல் பணமழை வீரர்களை எப்படியெல்லாம் மனசை மாற்றிவைத்துள்ளது என்பது அவர்கள் விடுக்கும் கருத்துகளைக் கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் தற்போது ஐபிஎல்-க்காக வாக்கலத்து வாங்க ஒரு படி மேலே போய் ஐபிஎல் கிரிக்கெட்டினால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்தது என்று ஒரு ‘பிட்’-ஐப் போட்டுள்ளார். இங்கிலாந்தின் கிரிக்கெட் பாரம்பரியம் எத்தகைய வரலாறு கொண்டது என்று ஆங்கிலேயர்கள் தங்களைப் புகழ்ந்து கொள்வதற்கு மாறாக பட்லர் ஐபிஎல் ஏதோ இங்கிலாந்து கிரிக்கெட்டை வளர்த்துள்ளது என்று கூறுகிறார். எப்படி? டி20 கிரிக்கெட்டை முதன் முதலில் அறிமுகம் செய்ததே இங்கிலாந்துதான்.

“ஐயமே இல்லை, சந்தேகமின்றி இங்கிலாந்து கிரிக்கெட் ஐபிஎல்லினால் வளர்ந்துள்ளது. அதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. ஐபிஎல் கிரிக்கெட்தான் உலகின் சிறந்த தொடர். அதாவது உலகக்கோப்பைகள் நீங்கலாக.

ஐபிஎல் தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, உதாரணமாக ஆர்சிபியின் கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் டேல் ஸ்டெய்ன், ஜஸ்பிரித் பும்ராவை, மலிங்காவை எதிர்கொள்ளும் சுவாரசியம், வளர்ச்சியுறும் ஒரு குழந்தையாக அத்தகைய கிரிக்கெட்டைத்தான் விளையாட விரும்புவோம், பாண்டசி கிரிக்கெட். அனைத்து அணிகளையும் கலந்து விடுங்கள் கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது எத்தனை சுவாரசியம்.

இங்கிலாந்து கிரிக்கெட் ஐபிஎல்-உடன் ஒரு சுவாரசியமான வரலாறு கொண்டது. கெவின் பீட்டர்சன் குறித்த ஆவணப்படம், அவர் எப்படி இதில் ஈடுபட விரும்பினார், அவர் சந்தித்த இடையூறுகள்.

கெவின் பீட்டன்சன் உண்மையில் நாங்களெல்லாம் ஐபிஎல் ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுகு ஐபிஎல் எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.” என்கிறார் ஜோஸ் பட்லர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in