

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு சமையல்கார தொழிலாளர் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் திங்களன்று மாரடைப்பினால் மரணமடைந்தார், ஆனால் இவரைச் சோதனை செய்து பார்த்த போது இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தன் உறவினருக்கு குழந்தை பிறந்ததையடுத்து பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மரணமடைந்த அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது, கரோனாவினால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மையத்தை திறந்த போது 20-30 பேர் கலந்து கொண்டனர், சமையல் தொழிலாளி கரோனாவுக்கு பலியானதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீரர்கள் பயிற்சி பெறும் மைதானத்துக்கும் சமையல் தொழிலாளர் பணியிடத்துக்கும் நீண்ட தூரம் இருப்பதால் வேறு யாருக்கும் பர்வியிருக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை என்று ஆணைய நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.