முதல் ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

முதல் ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆம்லா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 124, ரிலீ ரொசாவ் 89 ரன்கள் எடுத்தனர். ஆம்லா-ரொசாவ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து தரப்பில் மில்னி, மெக்லீனாகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் லியூக் ரோஞ்சி 1 ரன்னில் வெளியேறினாலும், டாம் லேத்தம்-கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 47 ரன்களில் வெளியேற, காயம் காரணமாக 4-வது வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்டில் 23 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜிம்மி நீஷம்-காலின் மன்றோ ஜோடி அதிரடியாக ஆட, நியூஸிலாந்து வெற்றியை நெருங்குவது போன்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் நீஷம் 41 ரன்களிலும், மன்றோ 33 ரன்களிலும் வெளியேற, ஆட்டம் தென் ஆப்பிரிக்கா வசமானது. பின்னர் வந்தவர்களை விரைவாக வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்தை 48.1 ஓவர்களில் 284 ரன்களுக்கு சுருட்டியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் டேல் ஸ்டெயின், பிலாண்டர், இம்ரான் தாஹிர், டேவிட் வியெஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 2-வது போட்டி வரும் 23-ம் தேதி நடக்கிறது.

ஆம்லா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 124, ரிலீ ரொசாவ் 89 ரன்கள் எடுத்தனர். ஆம்லா-ரொசாவ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in