Last Updated : 19 May, 2020 03:19 PM

 

Published : 19 May 2020 03:19 PM
Last Updated : 19 May 2020 03:19 PM

ஃபார்ம் லேசாகத் தடுமாறிய போது ரோஹித் சர்மாதான் என் கண்களைத் திறந்தார்- மயங்க் அகர்வால்

வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின் போது தன் பேட்டிங் பார்மில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்ட போது ரோஹித் சர்மா கூறிய அட்வைஸ் தனக்கு உதவியதாக இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.

2019 ஆகஸ்டில் இந்திய அணி மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்ட போது 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது, இதில் மயங்க் அகர்வால் 2வது டெஸ்ட்டில் ஒரு அரைசதம் அடித்தார் மற்றபடி சோபிக்கவில்லை.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையத்துக்காக சஞ்சய் மஞ்சுரேக்கருடன் பேசிய மயங்க் அகர்வால் கூறியது:

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வு என்னவெனில், ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்பதே. நன்றாகத் தொடங்குகிறோம், திட்டமிடுகிறோம் ஆனால் பார்ம் சரிவு ஏற்படுகிறது.

அப்போது ரோஹித் சர்மா என் அருகில் இருந்தார், அவர் கூறியது என் கண்களைத் திறப்பதாக அமைந்தது. அதாவது நான் முதல் தொடரில் ஆடிய விதத்துக்கும் 2வது தொடரில் ஆடிய விதத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறப்பாக ஆட வேண்டும் என்று எனக்கு நானே அழுத்தம் கொடுக்கிறேன் என்று அவர் சரியாகச் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மேட்சையுமே முதல் போட்டியாக நினைத்து ஆடு என்றார். அந்த அறிவுரையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அதைத்தான் பின்பற்ற முயற்சி செய்யவிருக்கிறேன்.

இவ்வாறு கூறினார் மயங்க் அகர்வால். நியூஸிலாந்துக்கு எதிராக கோலியே திணறிய டெஸ்ட் தொடரில் இவர் 102 ரன்களை எடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x