

நடப்பு ஐபிஎல் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் ஹீரோவாக எழுச்சிய்டைந்துள்ளார். தோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு அதிகம். இந்த நிலையில் நடப்பு ஐபில் தொடரில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்கள் மேக்ஸ்வெல், தோனி ஆகியோர் ஆவார்கள்.
அதேபோல் அதிகம் தேடப்பட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெற்றுள்ளது. தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகம் தேடப்பட்டுள்ளன.
தோனி, மேக்ஸ்வெல் தவிர அதிகம் தேடப்பட்ட வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங், டிவிலியர்ஸ், கம்பீர், ரோகித் சர்மா, டேல் ஸ்டெய்ன், ராபின் உத்தப்பா, ரவீந்தர் ஜடேஜா, யூசுப் பத்தான் ஆகியோர் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் கெய்ரன் போலார்ட் பந்தை தோனி சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்த தினத்தில் கூகுள் தேடல் பகுதியில் தோனியின் ‘கிராஃப்’ எகிறியுள்ளது.
அதேபோல் தேர்தல் நேரத்தில் யுவராஜ் சிங் பெயரும் அதிகம் தேடப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர் இரண்டு அதிரடி அரைசதங்களை விளாசினார்.
மார்ச் 24ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை விளாசி 42 பந்துகளில் 89 ரன்கள் அடித்த போது கூகுளில் டிவிலியர்ஸ் பெயர் அதிகம் தேடப்பட்டது.
மே மாதம் 2ஆம் தேதி கவுதம் கம்பீருக்கு குழந்தை பிறந்த செய்தியால் அவரது பெயர் கூகுள் தேடலில் அதிகம் புழங்கியுள்ளது.
இதனை கூகுள் தேடல் நிலவர ஆய்வு வெளியிட்டுள்ளது.