இது ஒரு ஷாட்டா? தொண்டையை அறுப்பேன் - பிளிண்டாஃப் ஸ்லெட்ஜிங்குக்கு யுவராஜின் பதிலடிதான் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்

இது ஒரு ஷாட்டா? தொண்டையை அறுப்பேன் - பிளிண்டாஃப் ஸ்லெட்ஜிங்குக்கு யுவராஜின் பதிலடிதான் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்
Updated on
1 min read

2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களுடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் இன்று வரை டி20 உலக சாதனையாக இருந்து வருகிறது.

அந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடிப்பதற்கு முன்பாக இங்கிலாந்து பவுலர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் உடன் யுவராஜ் சிங் பெரிய வாய்வார்த்தையில் ஈடுபட்டார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

அது என்ன என்று இன்ஸ்டாகிராம் உரையாடலில் கெவின் பீட்டர்சன் கேட்க யுவராஜ் சிங் கூறியதாவது:

பிளிண்டாப் இரண்டு நல்ல பந்துகளை வீசினார், அதில் ஒரு யார்க்கரை நான் பவுண்டரிக்கு அனுப்பினேன், அதனை அவர் ’டேஷ்’ஷாட் என்று கூறி என் தொண்டையை அறுப்பேன் என்றார். நான் அதற்கு என் கையில் என்ன பேட் இருக்கிறது என்று பாருங்கள், இதைக் கொண்டு உங்கள் பந்துகளை எங்கெல்லாம் அடிக்கப்போகிறேன் என்பதை மட்டும் பாருங்கள் என்றேன். பிராடை 6 சிக்சர்கள் அடிக்கும் போது நான் செம கடுப்பில் இருந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது. டிமிட்ரி மஸ்கரன்ஹாஸைப் பார்த்தேன், பிறகு பிளிண்டாஃபைப் பார்த்தேன்.

மஸ்கரன்ஹாஸ் என்னை ஒரே ஓவரில் 5 சிக்சர்களை ஒருநாள் போட்டியில் அடித்தார். அதனால் 6 சிக்சர்கள் அடித்தவுடன் நான் அவரை முதலில் பார்த்தேன், பிறகு பிளிண்டாபைப் பார்த்தேன்.

இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in