

முன்னதாக டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆரம்பம் முதலே மந்தமாக ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளேவின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை எடுத்திருந்தது. நன்றாகப் பந்துவீசிய கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எந்த கட்டத்திலும் எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடாமல் கட்டுப்படுத்தினர்.
துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் கவுதம், முறையே 12 மற்றும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிவந்த ராயுடு 12-வது ஓவரில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியிலும் அதிக ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்து (18 ரன்கள்) ஏமாற்றமளித்தார். மறுமுனையில் தாக்குப்பிடித்த ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆண்டர்சனைத் தொடர்ந்து களமிறங்கிய பொல்லார்ட் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த தவறினார்.
20-வது ஓவரில் சுனில் நரைன், ரோஹித் சர்மாவை 51 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பினார். அந்த ஓவரில் மேலும் 3 ரன்கள் மட்டுமே வர இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களுடன் மும்பை தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே தந்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.