கோலி ஃபார்மில் இல்லை அதனால் பாபர் ஆஸம்: உலக லெவனைத் தேர்வு செய்யும் இங்கி. ஸ்பின்னர் அடில் ரஷீத்

கோலி ஃபார்மில் இல்லை அதனால் பாபர் ஆஸம்: உலக லெவனைத் தேர்வு செய்யும் இங்கி. ஸ்பின்னர் அடில் ரஷீத்
Updated on
1 min read

இயான் மோர்கன் தலைமையிலான குறைந்த ஓவர் கிரிகெட் உலக லெவன் அணியை இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் தேர்வு செய்துள்ளார்.

இதில் விராட் கோலி, பாபர் ஆஸம் இருவரையும் தேர்வு செய்த அடில் ரஷீத், இருந்தாலும் தற்போதைய பார்மில் விராட் கோலியை விட பாபர் ஆஸமையே தான் ஆடவைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறிய அவர், “ஆ... இது கடினமான ஒரு தேர்வு..எனவே நடப்பு ஃபார்மைப் பார்க்க வேண்டும். எனவே நடப்பு ஃபார்மின் படி நான் பாபர் ஆஸமைத் ஆடவைப்பேன். இருவருமே உலகத்தரமான வீரர்கள்தான்” என்றார்

சுமாராக இருந்த கோலியின் பார்ம் நியூஸிலாந்து தொடரில் மோசமடைந்தது, 3 வடிவங்களிலும் 11 இன்னிங்ஸ்களில் 218 ரன்களை மட்டுமே எடுத்தார் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் 38 ரன்களை மட்டுமே எடுத்தார், இவரை விட ரிஷப் பந்த் அதிகம்.

அடில் ரஷீத்தின் உலக லெவன் அணி: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, பாபர் ஆஸம், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (வி.கீ), பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், இம்ரான் தாஹிர், ட்ரெண்ட் போல்ட், கேகிசோ ரபாடா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in