Published : 14 May 2020 04:55 PM
Last Updated : 14 May 2020 04:55 PM

கபில்தேவின் தனித்துவ சாதனை; அருகில் கூட ஒருவரும் இல்லை

கபில்தேவ் 1983 உலகக்கோப்பையை தன் தலைமையில் இந்தியாவுக்காக வென்று கொடுத்து இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிய பெருமை கொண்டவர்.

வேகப்பந்து வீச்சா? இந்தியாவா? என்று கேலி பேசிய காலத்தில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தி ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையையே உடைத்து சாதனை புரிந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான தனது பிரபல 175 நாட் அவுட் இன்னிங்ஸை நீண்ட காலம் சிறந்த உலகக்கோப்பை இன்னிங்சாக தக்கவைத்தவர்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றியவர், இந்த இன்னிங்சில்தான் 30 ஓவர்களை தொடர்ச்சியாக வேகம் குன்றாமல் வீசினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8/103, பாகிஸ்தானுக்கு எதிராக 7/56 என்று அசத்தியவர்.

தனிப்பட்ட முறையில் டீப் தேர்ட் மேன், பைன்லெக், லாங் ஆன், லாங் ஆஃப் என்று டீப்பில் பீல்ட் செய்தவர் கடும் பயிற்சியின் மூலம் ஸ்லிப் பீல்டராக உயர்ந்தார். முதன் முதலில் ஆங்கில மொழியில் அவ்வளவு தேர்ச்சி இல்லாதவராக இருந்தவர் கடும் உழைப்புடன் அதையும் ஒரு கை பார்த்தார், ஆகவே கபில் என்றால் முடியாதை முடியச் செய்யும் வித்தகர் என்றே நாம் அறிவோம்.

அவரிடம் ஒரு சாதனை இதுவரையில் வெளியில் தெரியாதது ஒன்று உள்ளது. அதாவது கபில்தேவ் தனது 131 டெஸ்ட் மேட்ச்கள் கொண்ட வாழ்க்கையில் 270 முறை பிற வீரர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஒருமுறை கூட ரன் அவுட் ஆனதில்லை. அதே போல் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடிய ஒரு வீரர் ரன் அவுட் ஆகாமல் இருந்தது கபில் மட்டுமே.

அதே போல் இருமுறைதான் இவரது எதிர் முனை வீரர் ரன் அவுட் ஆகியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்து தொடக்க வீரர் டீன் எல்கர் 63 டெஸ்ட் போட்டிகளில் 259 பார்ட்னர்ஷிப்களை மேற்கொண்டும் ரன் அவுட் ஆனதில்லை.

நடப்பு வீரர்களில் ஜானி பேர்ஸ்டோ, சண்டிமால், ரஹானே, டாம் லேதம் ஆகியோர் ரன் அவுட் ஆனதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x