Published : 14 May 2020 02:15 PM
Last Updated : 14 May 2020 02:15 PM
ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித்தை 3 காயப்படுத்தும் அதிரடி பவுன்சர்களைப் போட்டு திக்குமுக்காடச் செய்து 4வது பந்தில் வீழ்த்திவிடுவேன் என்று ஷோயப் அக்தர் ட்வீட் ஒன்றை செய்ய நெட்டிசன்களும் ஐசிசியும் அக்தரைக் கேலி செய்யும் விதமாக இமோஜிக்களையும், ட்விட்டர் பதிவுகளையும் வெளியிட்டு கலாய்த்தனர்.
ஐசிசி கூடைப்பந்து மேதை மைக்கேல் ஜோர்டான் இமேஜ்களைக் கொண்டு அக்தரைக் கலாய்த்தது. நெட்டிசன்களும் அக்தரின் செருக்கை எள்ளி நகையாடினர். இதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக தன்னால் ஏன் ஸ்டீவ் ஸ்மித்தைக் காயமடையும் பவுன்சர்களை வீசி 4வது பந்தில் அவர் விக்கெட்டையே காலி செய்வேன் என்று கூறும் விதமாக அக்தர் புதிய வீடியொவை வெளியிட்டுள்ளார்.
இதில் கேரி கர்ஸ்டன், பிரையன் லாரா, சவுரவ் கங்குலி தன் பவுன்சரில் அடிவாங்கும் காட்சிகளும், பிறகு யார்க்கர்களில் பேட்ஸ்மென்கள் பவுல்டு ஆகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த பழைய வீடியோக்களை வெளியிட்ட ஷோயப் அக்தர், ‘டியர் ஐசிசி புதிய மீம் அல்லது இமோஜியை கண்டுபிடியுங்கள், என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை, என்னால் முடிந்தது இந்த பழைய வீடியோக்கள்தான் இந்தாருங்கள் என்று வெளியிட்டுள்ளார்.
முன்னதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் பழைய பவுலர்கள், அல்லது பேட்ஸ்மென்கள் இந்தகால பேட்ஸ்மென்கள் அல்லது பவுலர்களை எதிர்கொண்டால் என்ன ஆகும் எனும் விதமாக ஷேன் வார்ன் / விராட் கோலி, பாபர் ஆஸம் / மெக்ரா, பாண்டிங் / ஆர்ச்சர், சச்சின் / ரஷீத் கான் என்று இவர்கள் இவர்களை எதிர்கொண்டால் என்ற ரீதியில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
இதற்குப் பதிலடியாகத்தான் ஷோயப் அக்தர், ஸ்டீவ் ஸ்மித்தை தான் 3 பயங்கர பவுன்சர்கள் பிறகு 4வது பந்தில் வீழ்த்தி விடுவேன் என்று பதில் தந்து அனைவரிடமும் சிக்கினார்.
தற்போது உண்மையிலேயே தனது பயங்கரமான பந்துகளை வீடியோவாக வெளியிட்டு ஐசிசி-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Dear @icc, find a new meme or Emoji. Sorry i couldn't find any, only found some real videos pic.twitter.com/eYID4ZXTvT
— Shoaib Akhtar (@shoaib100mph) May 13, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!