கிரிக்கெட்டில் உண்மை கண்டறியும் சோதனை தேவை: ரமீஸ் ராஜா கருத்து

கிரிக்கெட்டில் உண்மை கண்டறியும் சோதனை தேவை: ரமீஸ் ராஜா கருத்து
Updated on
1 min read

கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற தவறு செய்பவர்களைக் கண்டுபிடிக்க உண்மை கண்டறியும் சோதனை தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஃபிக்குல்லா ஷஃபிக் ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. ஊழலுக்கு எதிரான விதிகளை மீறியதற்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

இது பற்றி தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ரமீஸ் ராஜா, "கோவிட்-19க்காக உடல் வெப்பத்தை கணக்கெடுக்கும் கருவியைப் போல வீரர்களின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளவும் ஒரு கருவி வேண்டும். மாட்ச் ஃபிக்ஸிங் செய்ய முனைபவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுக்கலாம்.

உண்மை கண்டறியும் சோதனையைப் பயன்படுத்தலாம். போதைப் பொருள் பயன்பாடு குறித்து பரிசோதிக்க மாதிரிகளை எடுப்பது போல இந்த உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட வேண்டும். எந்த வீரராவது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறிய இதை நாம் பயன்படுத்த வேண்டும்.

நான் சொன்னது ஒரு புதிய யோசனை தான். ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குழப்பமாக உள்ளது. விதிகள், சட்டங்கள், வரைமுறைகள் உள்ளன. ஆனால் ஒரு வீரர் ஃபிக்ஸிங்கில் ஈடுபட முடிவெடுத்தால் யாரும் அவரைத் தடுக்க முடியாது. மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய அணுகுபவர்கள் இரண்டு கட்டங்களில் அணுகுவார்கள்

ஒன்று ஒரு வீரரின் கடைசி காலகட்டத்தில் ஏனென்றால் அவருக்கு இழக்க ஒன்றும் இருக்காது. அல்லது ஒரு வீரரின் ஆரம்ப காலகட்டத்தில் ஏனென்றால் அப்போது அவர்களை எளிதில் குழப்பிவிடலாம்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in