Published : 09 May 2020 15:21 pm

Updated : 09 May 2020 15:22 pm

 

Published : 09 May 2020 03:21 PM
Last Updated : 09 May 2020 03:22 PM

இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்த டி20 அணி எப்படி இருக்கும்? - ஆஸி.வீரர் அலெக்ஸ் கேரியின் ருசிகரக் கற்பனை

no-rohit-sharma-in-alex-carey-s-combined-india-australia-t20i-xi

கரோனா வைரஸ் பரவலினால் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே புதிராக இருந்து வரும் நிலையில் வீரர்கள் தங்களுக்கேயுரிய விதங்களில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் விக்கெட் கீப்பரும் அதிரடி வீரருமான அலெக்ஸ் கேரி தற்போதைய இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்களைக் கொண்ட இணைந்த டி20 அணியை அறிவித்துள்ளார்.

அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலியாவுக்காக 36 ஒருநாள் போட்டிகள் 28 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியுடனான இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் இந்தியா-ஆஸி. இணைந்த டி20 அணியை வெளியிட்டார்.

அந்த அணி வருமாறு:

ஷிகர் தவண்
டேவிட் வார்னர்
ஸ்டீவ் ஸ்மித்
விராட் கோலி
ரிஷப் பந்த்
அலெக்ஸ் கேரி
ரவீந்திர ஜடேஜா
மிட்செல் ஸ்டார்க்
பாட் கமின்ஸ்
ஜஸ்பிரித் பும்ரா
ஆடம் ஸாம்ப்பா

அடடே! ரோஹித் சர்மா எங்கப்பா? 108 டி20 போட்டிகளில் 2773 ரன்களை 138.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ரோஹித் சர்மா இந்த அணியில் இடம்பெறவில்லை.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

No Rohit Sharma in Alex Carey's combined India-Australia T20I XIஇந்தியா-ஆஸ்திரேலியா இணைந்த டி20 அணி எப்படி இருக்கும்? - ஆஸி.வீரர் அலெக்ஸ் கேரியின் ருசிகரக் கற்பனைகிரிக்கெட்ரோஹித் சர்மாஅலெக்ஸ்கேரி லெவன்இந்தியா-ஆஸ்திரேலிய இணைந்த லெவன்கோலிரிஷப் பந்த்பும்ராஜடேஜாதவண்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author