

# நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
# 700 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் 28-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 40 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
# வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.
# சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் இரு இடங்கள் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2014 நவம்பருக்குப் பிறகு மீண்டும் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார் கோஷல்.
# ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸுடன் மோதுகிறது. பிரான்ஸின் லீ டவ்கெட்டில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.