இன்னொரு தடவை இப்படி செஞ்ச..  ‘மூஞ்சியப் பேத்துருவேன்’ - பார்த்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹெய்டன்

இன்னொரு தடவை இப்படி செஞ்ச..  ‘மூஞ்சியப் பேத்துருவேன்’ - பார்த்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹெய்டன்
Updated on
1 min read

2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் தனது ‘இப்போதைய நண்பர்’ மேத்யூ ஹெய்டனை தான் செய்த கேலியையும் பதிலுக்கு ஹெய்டனின் கோபத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்தார் பார்த்திவ் படேல்.

2004-ல் ஒருநாள் தொடரில் நடந்தது பற்றி பார்த்திவ் படேல் கூறியதாவது:

“நான் பிரிஸ்பன் போட்டியில் குளிர்பானங்களை எடுத்துச் சென்றேன். அந்த மேட்சில் இர்பான் பதான், ஹெய்டனை வீழ்த்தினார். ஏற்கெனவே ஹெய்டன் சதம் அடித்து விட்டார், ஆனால் இர்பான் பதான் அவரை மிகவும் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தி விட்டார்.

அவரைத் தாண்டி செல்லும் போது நான் சும்மா இல்லாமல் அவரை நோக்கி ஹூ ஹூ என்று குரல் எழுப்பினேன்.

அவர் கடும் கோபமடைந்தார். நான் மீண்டும் பிரிஸ்பன் மைதானத்தின் குகை போன்ற ஓய்வறைக்குத் திரும்பிய போது வாசலில் நின்றிருந்த ஹெய்டன் என்னை நோக்கி, ‘இன்னொரு தடவை இப்படி செஞ்ச மூஞ்சிய பேத்துருவேன்’என்றார், நான் ‘ஸாரி’ என்றேன். பிறகும் நான் நின்று கொண்டிருந்தேன் ஆனால் அவர் பதில் கூறாமல் சென்று விட்டார்.

அப்போது என்னை அடிக்க பார்த்தார், ஆனால் அதன் பிறகு சிஎஸ்கே அணியில் சிறந்த தோஸ்த் ஆகி விட்டோம்.

அவருடன் தொடக்க வீரராக ஆடுவது ஒரு தனி அனுபவம். களத்துக்கு வெளியேயும் நல்ல நேரங்களை செலவிட்டுள்ளோம்.

அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு முறை சென்ற போது, ஹெய்டன் என்னை வீட்டுக்கு அழைத்து சிக்கன் பிரியாணியும் தாலும் செய்து கொடுத்தார். ” என்றார் படேல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in