Last Updated : 07 May, 2020 05:24 PM

 

Published : 07 May 2020 05:24 PM
Last Updated : 07 May 2020 05:24 PM

முதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது என் இருதயமும் பயத்தில் படபடக்கும்: தோனி ஒப்புதல் 

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று எம்.எஸ். தோனி கூறியுள்ளார்.

அதாவது 15 நாட்களுக்குத்தான் மனநோய் ஆலோசகர் இருக்கிறார் என்றால் அவர் வெறும் அனுபவங்களை மட்டுமேதான் பகிர முடியும் நிரந்தரமாக அணியுடன் அவர் இருக்க வேண்டும். நவீன காலத்தில் விளையாட்டும் மற்ற துறைகள் போல் அழுத்தம் தரும் ஒரு துறையாக மாறிவிட்டது என்கிறார் எம்.எஸ்.தோனி.

நாட்டின் விளையாட்டு வீரர்கள் மனநோய் பிரச்சினைக்கும் வரும்போது தங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருப்பதை ஏற்கத் தயங்குவதாகவும், அதனால்தான் ஒரு மனநிலை பயிற்சியாளர் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எம்ஃபோர் என்ற அமைப்பு நடத்திய ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுடன் உரையாடிய தோனி கூறியதாவது:

நான் பேட்டிங் செய்ய செல்லும்போது முதல் 5, 10 பந்துகளை எதிர்கொள்ளும்போது என்னுடைய இதயத் துடிப்பு எகிறும். இதனால் எனக்கு மன அழுத்தம் உண்டாகும். எனக்குப் பயம் உண்டாகும். எல்லோருக்கும் இப்படித்தான். இதை எதிர்கொள்வது எப்படி? இது சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் பயிற்சியாளரிடம் இதைக் கூறத் தயங்குவோம். இதனால் தான் வீரருக்கும் பயிற்சியாளருக்குமான உறவு என்பது மிகவும் முக்கியமானது.

மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாள்களுக்கு மட்டும் அணியுடன் இருக்கக்கூடாது. எனில் அவரால் அனுபவங்களை மட்டுமே கூற முடியும். அணியுடன் அவர் எப்போதும் இருந்தால் ஆட்டம் நடைபெறும்போது எப்போதெல்லாம் வீரர்கள் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் ஒரு வீரருக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான உறவு எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் மிக முக்கியமானது.

என்றார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x