

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங் கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் (எஸ்டிஏடி) சார்பில் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது. அதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2014-15-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்பவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில் பவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் படுகின்றன.
1.7.2013 முதல் 30.6.2014 வரையிலான காலங்களில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங் கள், இந்திய விளையாட்டு ஆணையம், அகில இந்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற போட்டி களில் வெற்றி பெற்ற சான்றிதழ் கள் மட்டுமே கணக்கில் கொள்ளப் படும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும்.
இதேபோல் எஸ்டிஏடி இணையதளத்திலிருந்தும் (>www.sdat.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் ரூ.10-க்கான அஞ்சல் ஆணையோ அல்லது வங்கி வரைவோலையோ இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வீரர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஷம்பூ கல்லோலிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.