Published : 06 May 2020 09:12 AM
Last Updated : 06 May 2020 09:12 AM

உங்கள் மேல் எனக்குப் பொறாமை இல்லை: அஸ்வினிடம் கூறிய ஹர்பஜன்

அஸ்வின் மேல் பொறாமை இருப்பதாகக் கூறுபவர்களுக்குக் கூறுகிறேன் எனக்கு உங்கள் மீது எந்த விதமான பொறாமையும் இல்லை என்று ஹர்பஜன் சிங், அஸ்வினிடம் இன்ஸ்டாகிராம் அரட்டையின் போது தெரிவித்தார்.

தமிழக இந்திய வீரர் அஸ்வின் 71 டெஸ்ட் போட்டிகளில் 365 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட்டில் 417 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அடிப்படையில் இருவரும் வேறு வகையான ஆஃப் ஸ்பின்னர்கள், இருவரும் லைவ் அரட்டையில் இன்ஸ்டாகிரமைல் உரையாடிய போது ஹர்பஜன் சிங் கூறியதாவது:

நிறைய பேர் நான் பொறாமை பிடித்தவன் அது இது என்று பலதையும் கூறுகின்றனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும்.

நான் உங்களிடம் (அஸ்வின்) கூற விரும்புவதெல்லாம் இப்போது நீங்கள்தான் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்.

எனக்கு நேதன் லயனையும் பிடிக்கும், ஆஸ்திரேலியாவில் ஸ்பின் கடினம் அங்கு அவர் சிறப்பாக வீசி வருகிறார். நீங்கள் (அஸ்வின்) உருவாகி வரும் லெஜண்ட்களில் ஒருவர். நீங்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வாழ்த்துகிறேன், என்றார் ஹர்பஜன் சிங்.

இருவரது உரையாடலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலைகீழாக மாறிய 2001 கொல்கத்தா டெஸ்ட் பங்களிப்பு செய்தது. ஃபாலோ ஆன் கொடுத்து ஸ்டீவ் வாஹ் மூக்குடைப்பட்ட அந்த டெஸ்ட்டில் லஷ்மணின் 281, திராவிடின் 180 ரன்கள் ரசிகர்களின் நினைவில் மூலப்படிவமானது வேறு விஷயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x