Published : 04 May 2020 05:41 PM
Last Updated : 04 May 2020 05:41 PM

குடும்பத்தினர் ஆதரவு இல்லை எனில்... 3 முறை என் வாழ்வில் தற்கொலை எண்ணம் குறுக்கிட்டது: ரோஹித் சர்மாவிடம் மனம் திறந்த முகமது ஷமி

தன் வாழ்க்கையின் இருண்ட கணங்கள் பற்றி ரோஹித் சர்மாவுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் மனம் திறந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

“2015 உலகக்கோப்பை தொடரில் காயத்துக்கு பிறகே 18 மாதங்கள் ஆனது மீண்டு வர. இது என் வாழ்க்கையில் வலிநிறைந்த நாட்களாகும். இது மன அழுத்த காலக்கட்டமும் கூட.

மீண்டும் ஆடத் தொடங்கிய போது என் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகள் என்னைப் பிடித்து உலுக்கின. என் குடும்பத்தினர் மட்டும் எனக்கு ஆறுதலாக இல்லையெனில் நான் மீண்டு வந்திருக்க முடியாது, இந்தக் காலக்கட்டத்தில்தான் 3 முறை தற்கொலை எண்ணம் என் மனதில் குறுக்கிட்டது.

என்னுடன் 24 மணி நேரமும் யாராவது அருகில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. நான் மன ரீதியாக சரியாக இல்லை, கடும் உளைச்சலில் இருந்தேன். என் குடும்பம் மட்டும் இல்லையெனில் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். என் குடும்பத்தாருக்கு என் நன்றிகள்” இவ்வாறு கூறினார் முகமது ஷமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x