பிரான்ஸை வீழ்த்தியது இந்தியா

பிரான்ஸை வீழ்த்தியது இந்தியா
Updated on
1 min read

உலக ஹாக்கி லீக் இறுதிச்சுற்றுக்கு தயாராகும் வகையில் ஐரோப் பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய ஹாக்கி அணி. இதில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் மோதுகிறது இந்திய அணி.

பிரான்ஸின் லீ டவ்கெட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பிரான்ஸும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்லென்சனாவிடம் பந்து சென்றது. அப்போது பிரான்ஸின் பின்களம் பலவீனமாக இருந்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிங்லென்சனா, மிக வேகமாக பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கோலடித் தார்.

இதன்பிறகு 26-வது நிமிடத்தில் இந்திய வீரர் எஸ்.வி.சுனில், பிரான்ஸின் பின்கள வீரர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அற்புதமாக கோலடிக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பிரான்ஸை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த ஆட்டம் பிரான்ஸின் வாட்டிஜீஸ் ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in