

சர்வதேச தடகள சம்மேளனத் தின் (ஐஏஏஎஃப்) புதிய தலைவராக செபாஸ்டியன் கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக பெய்ஜிங்கில் நடந்த வாக்கெடுப்பில் செபாஸ்டியன், உக்ரைனின் முன்னாள் கம்பு ஊன்றித் தாண்டுதல் வீரரான செர்ஜி பப்காவைத் தோற்கடித்தார். செபாஸ்டியன் 111 வாக்குகளும், செர்ஜி 92 வாக்குகளும் பெற்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த செபாஸ்டியன் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 1,500 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். செபாஸ்டியன், ஐஏஏஎஃப் தலைவர் பதவியில் 4 ஆண்டுகள் இருப்பார். இவர் 2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்துள்ளார்.