

சச்சின் டெண்டுல்கர் இங்கே கிரிக்கெட் கடவுள், விராட் கோலி இவரது சாதனைகளைக் கடந்து செல்கிறாரா என்பதைப் பொறுத்திருந்துதா பார்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பிரெட் லீ கூறியதாவது:
இங்கு நாம் பேசுவது எண்ணிக்கையில் பெரிய அளவிலானது ஆகும். நீங்கல் 7-8 ஆண்டுகள் கிரிக்கெட் என்றீர்கள். விராட் கோலி இந்த வேகத்தில் சச்சின் டெண்டுல்கர் ரன்களை தாண்டி விடுவார்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை யாராவது உடைப்பார் என்று எப்படி கூற முடியும்? அவர் இங்கே கடவுள். கடவுளை விஞ்ச முடியுமா, பொறுத்திருந்துப் பார்ப்போம்.
கிரிக்கெட் கடவுளைக் கடக்க வேண்டுமெனில் 3 விஷயங்கள் கோலி கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று திறமை என்பது, இதை நீக்கி விடலாம் ஏனெனில் விராட் கோலியிடம் திறமைக்கு பஞ்சமில்லை.
அடுத்ததாக உடல் தகுதி, விராட் கோலியிடம் இதுவும் உள்ளது, அதாவது கிரிக்கெட் ஆடும் தருணங்களில் மனைவியை பிரிந்திருப்பது, அதுவும் குழந்தைப் பிறந்து விட்டா ல் அதைப் பிரிந்து இருப்பது போன்ற மனரீதியான கடினப்பாடுகளை கோலி கடக்க வேண்டும். எனவே திறமை , உடல் தகுதி, மன உறுதி மூன்றும் இருந்தால் அவர் சச்சினை முறியடித்து விடுவார்” என்ற பிரெட் லீ.
டெண்டுல்கருக்கு தனது பிறந்தநாள் செய்தியாக, “ஹேப்பி பர்த்டே லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் களத்தில் போட்டிகள் தற்போது இல்லை.. ஆனால் நட்பு எப்போதும் உண்டு. பாதுகாப்பாக இரு நண்பா, பிரமாதமாகக் கொண்டாடுங்கள்” என்றார்.