மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி வாசிம் அக்ரம் கேட்டிருந்தால் அவரை கொன்றிருப்பேன்: ஷோயப் அக்தர் அதிரடி

மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி வாசிம் அக்ரம் கேட்டிருந்தால் அவரை கொன்றிருப்பேன்: ஷோயப் அக்தர் அதிரடி
Updated on
1 min read

தன்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி வாசிம் அக்ரம் அணுகியிருந்தால் அவரைக் கொன்றிருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் பற்றி அக்தர் பேசியுள்ளார். அவர் பேசியுள்ளதாவது:

"90-களின் ஆட்டங்கள் சிலதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தனது அட்டகாசமான பந்துவீச்சின் மூலமாக, கடினமான சூழலிலிருந்து பாகிஸ்தானை வாசிம் அக்ரம் எப்படி ஜெயிக்க வைத்தார் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி அக்ரம் அணுகியிருந்தால் அவரை அழித்திருப்பேன், அல்லது கொன்றிருப்பேன். ஆனால் அவர் அப்படி எதையும் என்னிடம் சொன்னதில்லை.

அவரோட 7-8 வருடங்கள் விளையாடியிருக்கிறேன். முதலில் ஆட வருபவர்களின் விக்கெட்டுகளை எடுத்து என்னை எவ்வளவு முறை காப்பாற்றியிருக்கிறார் என்று என்னால் கூற முடியும். நான் விக்கெட் எடுக்க, கடைசியில் ஆட வருபவர்களை மிச்சம் வைப்பார். என்னை விட அதிக விக்கெட் எடுத்த அனுபவசாலியாக இருந்தாலும் என் விருப்பம் போல அவர் பந்து வீச அனுமதிப்பார்" என்று அக்தர் கூறியுள்ளார்.

ஷோயிப் அக்தர் பாகிஸ்தானுக்காக 46 டெஸ்ட் போட்டிகள், 163 ஒருநாள் போட்டிகள், 15 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். அக்ரம் 104 ஒருநாள் போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும், 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in