

லாக்-டவுன் காரணமாக சலூன்கள் செயல்படவில்லை, பலரும் முடிதிருத்தும் நிபுணர்களாகி வருகின்றனர், வீட்டிலேயே முடிவெட்டிக் கொள்கின்றனர், சிலர் குழந்தைகளுக்கும் தாங்களே முடிவெட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தானே முடிவெட்டிக்கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர ரசிகர்கள் அவருக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் , “ஸ்கொயர் கட் ஆடுவது முதல் என்னுடைய ஹேர் கட் வரை நான் பல்வேறு வித்தியாசமான செயல்களை மகிழ்வுடன் செய்து வருகிறேன், என்னுடைய சிகை எப்படி உள்ளது” என்று ஜாலி மெசேஜ் செய்துள்ளார்.
டெண்டுல்கரின் ஆரம்ப கால ஷாட்களில் பிரதானமானது ஸ்கொயர் கட்களாகும் பிறகு அது நேர் ட்ரைவ்களானது. இருந்தாலும் ஆரம்ப கால சச்சினின் பேக்ஃபுட் பஞ்ச், ஸ்கொயர் கட்களை மறக்க முடியாதுதான்.
மும்பையில் சமூக நல அமைப்புக்கு உதவி மூலம் 5,000 பேருக்கு உணவுக்கான நன்கொடையை சச்சின் செய்துள்ளார்.